கொரோனா வைரஸ்: இந்தியாவை போன்று கனடாவிலும் ஊரடங்கு…அந்நாட்டு பிரதமர் கெடுபிடி – வீடியோ உள்ளே

 

கொரோனா வைரஸ்: இந்தியாவை போன்று கனடாவிலும் ஊரடங்கு…அந்நாட்டு பிரதமர் கெடுபிடி – வீடியோ உள்ளே

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவிலும் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் பிறப்பித்துள்ளார்.

ஒட்டாவா: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவிலும் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் பிறப்பித்துள்ளார்.

கனடாவில் இதுவரை 2792 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 112 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் அந்நாட்டில் 26 பேர் பலியாகி உள்ளனர். கனடாவில் 10 லட்சம் பேரில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

கனடாவில் வசிக்கும் தமிழர் பேசுகையில், “கொரோனா பாதிப்பு தினம்தோறும் கனடாவிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அண்டாரியோ, க்யூபக், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மூன்று மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அண்டாரியோவில் பருவநிலை மாறுவதால் மக்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். அதை தவிர்க்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்றார்.