கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – டெக்சாஸில் நடைபெற இருந்த SXSW விழா மாநாடு ரத்து

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – டெக்சாஸில் நடைபெற இருந்த SXSW விழா மாநாடு ரத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் டெக்சாஸில் நடைபெறவிருந்த SXSW விழா மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெக்சாஸ்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் டெக்சாஸில் நடைபெறவிருந்த SXSW விழா மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சவுத் பை சவுத் வெஸ்ட் திருவிழா மாநாடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டனில் வருகிற மார்ச் 13 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த மாநாடு விழா ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக SXSW விழா மாநாட்டில் இருந்து ட்விட்டர், பேஸ்புக், டிக்டாக் ஆகிய நிறுவனங்கள் விலகுவதாக அறிவித்தன.

ttn

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 3070 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகளவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் கொரோனா வைரஸால் 1200 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக 124 பேர் உயிரிழந்துள்ளனர்.