கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொல்லும் ட்விட்டர் நிர்வாகம்

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொல்லும் ட்விட்டர் நிர்வாகம்

கொரோனா வைரஸ் பீதியால் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு ட்விட்டர் நிர்வாகம் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: கொரோனா வைரஸ் பீதியால் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு ட்விட்டர் நிர்வாகம் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக நேற்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள ட்விட்டர் ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். கடந்த ஆண்டு இறுதியில் மத்திய சீனாவில் தோன்றியதிலிருந்து இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை 3,100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். அத்துடன் 90,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

twitter

இதனால் உலகம் முழுக்க வெளிநாட்டு பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனவே பல நாட்டு அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதால் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்ப்பதை தவிர்க்குமாறு தனது ஊழியர்களை ட்விட்டர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே கட்டாயமாக்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.