கொரோனா வைரஸ் அச்சம்: 2020 நியூயார்க் ஆட்டோ விழா ஒத்தி வைப்பு

 

கொரோனா வைரஸ் அச்சம்: 2020 நியூயார்க் ஆட்டோ விழா ஒத்தி வைப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக 2020 நியூயார்க் ஆட்டோ விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக 2020 நியூயார்க் ஆட்டோ விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல்வேறு துறைகளும் ஆட்டம் கண்டுள்ளன. அந்த வகையில் ஆட்டோமொபைல் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா ஆட்டோ விழா, மோட்டோ ஜிபி கத்தார் சுற்று மற்றும் எஃப்1 பந்தயத்தின் சீன சுற்று ஆகிய ஆட்டோ விழாக்கள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது 2020 நியூயார்க் ஆட்டோ விழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற இருந்தது. இதன் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.