கொரோனா வைரஸ் அச்சம்: ப்ளீஸ் வராதீங்க எனக்கூறிய மருத்துவமனை நிர்வாகம்!

 

கொரோனா வைரஸ் அச்சம்: ப்ளீஸ் வராதீங்க எனக்கூறிய மருத்துவமனை நிர்வாகம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலை தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக அரசு, மக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

jipmer hospital puducherry
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை புறநோயாளிகள் வந்து செல்கின்றார்கள். இவர்களில் வயதானவர்களே அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சிறிய மருத்துவ உபாதைகளுக்கான நோய்களுக்கு சிகிச்சை பெற ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. அதே போல் நாட்பட்ட சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் உள்ளிட்டவற்றிக்கு மருந்து வாங்க வருபவர்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும், அவசர காரணங்களை தவிர நாட்பட்ட நோய்க்கான அறுவை சிகிச்சைகளை கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்பு செய்து கொள்ளலாம் என்றும் ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.