கொரோனா வைரஸ்: ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வு ரத்து

 

கொரோனா வைரஸ்: ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வு ரத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப் 8 டெவலப்பர்கள் நிகழ்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப் 8 டெவலப்பர்கள் நிகழ்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 13 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 2022 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 256 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது உலக மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

fb

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் 2020 எஃப் 8 டெவலப்பர்கள் நிகழ்வு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் மே 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளான சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அலுவல் ரீதியிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற இருந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவையும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஃபேஸ்புக் புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.