கொரோனா வைரஸை முற்றிலும் அழிக்கும் கிருமி நாசினி தயார் : அசத்தும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்!

 

கொரோனா வைரஸை முற்றிலும் அழிக்கும் கிருமி நாசினி தயார் : அசத்தும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும்  23  லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவை தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்  என்றும் மாஸ்க் அணியவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால்  கிருமி நாசினி, சோப்பு போட்டு கைகளை கழுவினால் முழுமையாக கொரோனா வைரஸ் அழியுமா என்பது சந்தேகம் தான். 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா வைரஸை முற்றிலும் அழிக்கும் கிருமி நாசினியை கண்டுபிடித்துள்ளது. இதுவரை நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் கிருமி நாசியானது கொரோனா வைரஸின் மேல் பகுதியை மட்டும் செயலிழக்க செய்தும் தன்மை உடையது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த கிருமி நாசினியானது கொரோனா வைரஸை முற்றிலும் அழித்து, அதனை செயல் இழக்க செய்து விடுகிறது. 

t

மேலும் இந்த கிருமிநாசினி கொண்டு மருத்துவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்களை சுத்தம் செய்யலாம்  என்றும் அரசோடு சேர்ந்தும் பெரிய நிறுவனங்களுடன் இணைந்தும் அதிகளவு உற்பத்தி செய்யவுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.