கொரோனா வைரஸை தடுக்க வேண்டி.. ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த தன்வந்திரி யாகம்!

 

கொரோனா வைரஸை தடுக்க வேண்டி.. ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த தன்வந்திரி யாகம்!

மக்கள் நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் கோவில்  நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் கடந்த செவ்வாய் கிழமை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

ttn

இதனிடையே ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகத்தின் வைரல் வெக்டார்டு தொழில்நுட்பம்,  சார்ஸ்-2 புரதம் மற்றும் அடீனோ வைரஸ் வாக்சின் வெக்டார் உள்ளிட்டவற்றைக் கொண்டு தடுப்பூசி தயாரிப்பதில் முதல் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

இந்த கொடிய வகை கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று பல மக்கள் பிரார்த்தித்து வரும் நிலையில், உலகபிரசித்திப் பெற்ற  ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலில்  தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த யாகம் உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை தடுக்க வேண்டியும், மக்கள் நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் கோவில்  நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.