கொரோனா வைரஸை எதிர்த்து வலுவான மூலோபாயம்! மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள் இன்று வீடியோ கான்பரன்சிங்கில் விவாதம்….

 

கொரோனா வைரஸை எதிர்த்து வலுவான மூலோபாயம்! மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள் இன்று வீடியோ கான்பரன்சிங்கில் விவாதம்….

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வலுவான மூலோபாயத்தை உருவாக்க, இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உள்பட சார்க் அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விவாதிக்க உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் சார்க் நாடுகளின் தலைமை கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான ஒரு வலுவான மூலோபாயத்தை முன்வைக்க  விரும்புகிறேன். நமது குடிமக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நம்மால் விவாதிக்க முடியும். ஒன்றாக, நாம் உலகிற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கலாம் மற்றும் ஆரோக்கியமான கிரகத்திற்கு பங்களிக்க முடியும் என சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு  அழைப்பு விடுத்து இருந்தார். 

சார்க் உறுப்பு நாடுகள்

சார்க் அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகிய எட்டு 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா வைரஸ் தொடர்பான அழைப்பு மற்ற சார்க் உறுப்பு நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நம்ம பங்காளி பாகிஸ்தான் கூட கொரோனா வைரசுக்கு எதிராக சர்வதேச மற்றும் மண்டல அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என ஒப்புக்கொண்டது.

வீடியோ கான்பரன்சிங் தகவல்

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கோரோனா வைரஸ் எதிர்கொள்வது தொடர்பாக ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்க உள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் ரவீஷ் குமார் டிவிட்டரில், பொதுவான நன்மைக்காக ஒன்றாக வருவது! பிராந்தியத்தில் கோவிட்-19-ஐ எதிர்த்து போராடுவதற்கான ஒரு வலுவான மூலோபாயத்தை உருவாக்க, சார்க் அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேச உள்ளனர். இந்த வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வழிநடத்துவார் என பதிவு செய்துள்ளார்.