கொரோனா வைரஸை எதிர்த்து சீனா சிறப்பாக போராடுகிறது – உலக சுகாதார அமைப்பு பாராட்டு

 

கொரோனா வைரஸை எதிர்த்து சீனா சிறப்பாக போராடுகிறது – உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா வைரஸை எதிர்த்து சீனா சிறப்பாக போராடி வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸை எதிர்த்து சீனா சிறப்பாக போராடி வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4011-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3136 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

who

இந்நிலையில், கொரானா வைரஸை எதிர்த்து போராடுவது எப்படி என்பதற்கு முன்னுதாரணமாக சீனா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவின் நோய் தடுப்பு முயற்சிகள் கொரானா வைரஸை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸால் பெருமளவில் பாதிக்கப்பட்ட சீனாவின் வுகான், ஹூபே போன்ற நகரங்களில் அந்த வைரஸ் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் சில மாகாணங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.