கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஊரடங்கு நிரந்தர தீர்வல்ல – ராகுல்காந்தி

 

கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஊரடங்கு நிரந்தர தீர்வல்ல – ராகுல்காந்தி

ஊரடங்கு என்பது கொரோனா வைரஸை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஒன்று தான் என்றும், அதுவே தீர்வல்ல என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு மட்டுமே போதாது என்றும் அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்வதே முக்கியம் என்றும் காங்கிரஸ்  முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.கொரோனாவை தடுக்க பொதுவான நடவடிக்கைகளை காட்டிலும் யுக்தி ரீதியான செயல்களே பலன் தரும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

rahulgandhi

 ஊரடங்கு உத்தரவு முடிந்து மக்கள் வெளியே வரும்போது கொரோனா தொற்று கடுமையாக அதிகரிக்கும் என்று தெரிவித்த ராகுல், ஊரடங்கு உத்தரவு கொரோனா பரவலை தாமதிக்க உதவுமே தவிர தடுக்க உதவாது என்று பேசினார். தற்போது கொரோனா பரிசோதனைகள் போதிய அளவு மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதை அதிகரிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த இக்கட்டான தருணத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்