“கொரோனா வைரஸுக்கு  மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்!

 

“கொரோனா வைரஸுக்கு  மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை” வெளியான அதிர்ச்சி தகவல்!

மக்கள் கொரனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்ட பிறகே நாட்டுக்குள் வர  அனுமதிக்கப்படுகிறார்கள். 

சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவி அங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களை பலிகொண்டுள்ளது. சீனாவை மட்டுமல்லாது,  கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாகச் சீனாவிலிருந்து  சொந்த நாடுகளுக்குத் திரும்பும் மக்கள் கொரனா பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்ட பிறகே நாட்டுக்குள் வர  அனுமதிக்கப்படுகிறார்கள். 

 


 

இதனிடையே கொரோனா வைரஸுக்கு  மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக சில செய்திகள்  வெளியாகி வருகின்றன. இருப்பினும் இதுகுறித்து தெளிவான விளக்கம் யாரும் அறியவில்லை.  இந்நிலையில்  இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்,”கொரோனா வைரஸுக்கு  மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் உலகளாவிய மருத்துவ குழு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக நோய்த் தடுப்பு மருந்துகளும் இருப்புக்கள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவர்கள் 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள்.

ttn

மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மருந்து  என்று கூறினால் அதை யாரும் நம்ப வேண்டாம். அதை வைத்திருப்பவர்கள் எங்களிடம் தெரிவித்து அதை உறுதிசெய்யப்பட்ட  பிறகே வழங்க வேண்டும்” என்றார்.