கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தயாரிப்பு.. முதல்கட்டத்தை எட்டியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்!

 

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தயாரிப்பு.. முதல்கட்டத்தை எட்டியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 27,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 27,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா,. இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முதல் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இதற்கான சோதனை மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் தேம்ஸ் பள்ளத்தாக்கில் இருக்கும் ஆய்வு கூடத்தில் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைக்காக 510 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, சார்ஸ்-2 புரதம் மற்றும் அடீனோ வைரஸ் வாக்சின் வெக்டார் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள வைரல் வெக்டார்டு தொழில்நுட்பம் சிறந்து விளங்குவதால், கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றிகரமாக முடியும் என்று கூறப்படுகிறது. 

ttn

முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவை எபோலா வைரஸ் கடுமையாக தாக்கியது. அதிலிருந்து மக்களை காக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தான் தடுப்பூசியை கண்டுபிடித்தது. அதே போல இந்த கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.