“கொரோனா வைரஸுக்கு உங்க கிட்ட தீர்வு இருக்கா!” – பிரதமர் மோடி ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிப்பு

 

“கொரோனா வைரஸுக்கு உங்க கிட்ட தீர்வு இருக்கா!” – பிரதமர் மோடி ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீர்வு வழங்குபவர்களுக்கு பிரதமர் மோடி ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளார்.

டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீர்வு வழங்குபவர்களுக்கு பிரதமர் மோடி ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கர்நாடகா மற்றும் டெல்லியில் என இருவர் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட 64 வயதான ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் இந்தயாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 129 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறந்த தீர்வு வழங்குபவர்களுக்கு பிரதமர் மோடி ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவாக வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மார்ச் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பொது இடங்களில் பெருமளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.