கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி!

 

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிறைக்கைதிகள் 70 ஆயிரம் பேரை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல்  இந்த கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சீனாவில்  3,136 பலியாகியுள்ளனர். அதேபோல் ஈரானில் 237 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், 7,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிறைக்கைதிகள் 70 ஆயிரம் பேரை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ttttn

இந்நிலையில், ஈரானில் மது அருந்தினால் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கலாம் என்ற வதந்தி அந்நாடு முழுவதும் பரவியுள்ளது. இதனால் தடையை மீறி குசெஸ்தான் மற்றும் அல்பார்ஸ் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர்  உயிரிழந்தனர். மேலும் 214 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த சாராயத்தைக் குடித்ததே உயிரிழப்புக்குக் காரணம்  என சொல்லப்படுகிறது.