கொரோனா வைரஸால் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி. வளர்ச்சி குறையும்….

 

கொரோனா வைரஸால் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி. வளர்ச்சி குறையும்….

கொரோனா வைரஸால் ஏற்படுத்தும் பாதிப்புகளால், அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி முப்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையும் என எஸ்.பி.ஐ. குரூப் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் 21 நாள் முடக்கத்தால் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படடுள்ளது. இதன்தாக்கம்  இந்த நிதியாண்டில் மட்டுமல்ல அடுத்த நிதியாண்டிலும் எதிரொலிக்கும் என தற்போது தெரியவந்துள்ளது. 

கொரோனா வைரஸ்

எஸ்.பி.ஐ. குரூப் தலைமை பொருளாதார நிபுணர் சவுமியா காந்தி கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொற்று நோய் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் 21 நாள் முடக்கத்தின் விளைவுகளால் 2020-21ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.6 சதவீதமாக குறையும். இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த வளர்ச்சியாக இருக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

தற்போது மேற்கொள்ளப்படும் 21 நாள் முடக்கத்தால் நாமினல் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். வருவாய் இழப்பு ரூ.1.77 லட்சம் கோடியும், மூலதன  வருவாய் ரூ.1.70 கோடியும் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தர நிர்ணய நிறுவனமான கிரிசலும் அண்மையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 5.2 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.