கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது.. ஒரே நாளில் 4,885 பேருக்கு கொரோனா உறுதி…

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது..  ஒரே நாளில் 4,885 பேருக்கு கொரோனா உறுதி…

நம் நாட்டில் நேற்றும் மட்டும் 4,885 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,674ஆக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் நினைத்து பார்க்காத அளவில் இருக்கிறது.

கொரோனா வைரஸ்

மாநில அரசுகளின் லேட்டஸ்ட் அறிக்கையின்படி, நேற்று மட்டும் நம் நாட்டில் புதிதாக 4,885 பேருக்கு தொற்று நோயான கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய தினத்தை காட்டிலும் சுமார் 1,100 அதிகமாகும். இதனையடுத்து இதுவரை நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,674 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 3 மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் நேற்று வரை மொத்தம் 30,706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகத்தை குஜராத் பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தில் (10,989) உள்ளது. 10,585 கொரோனா நோயாளிகளுடம் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.