கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380ஆக உயர்ந்தது….

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380ஆக உயர்ந்தது….

நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380ஆக உயர்ந்ததுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று மாலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

லாவ் அகர்வால்

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 6,361 பேரும், இடம் பெயர்ந்த ஒருவரும், கொரோனாவுக்கு பலியான 886 பேரும் அடங்குவர். தற்போது 21,132 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,463 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

கடந்த 28 நாட்களாக 16 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகவில்லை. கடந்த 14 நாட்களாக 85 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. RT-PCR சோதனையை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்த சோதனை மூலம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை முன்கூட்டியே அடையாளம் கண்டு மற்றும் சம்பந்தப்பட்ட நபரை தனிமைப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.