கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டது….. மகாராஷ்டிராவில் அதிகம்… கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 10 பேர்….

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டது….. மகாராஷ்டிராவில் அதிகம்… கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 10 பேர்….

மாநிலங்களின் அறிக்கையின்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் வேகமாக பரவ தொடங்கியது. அங்கு இந்த வைரசுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். சீனாவை மட்டும் பதம் பார்த்து வந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவ தொடங்கியது. அமெரிக்கா, இந்தியா, தென்கொரியா, இத்தாலி என 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் பரவும் கொரோனா வைரஸ்

நம் நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பலருக்கு  தெரியவந்தது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்தவர்களிடம்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மருத்து பரிசோதனை மற்றும் பல்வேறு நாட்டினருக்கு வழங்கப்பட்ட விசா தற்காலிகமாக தடை என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாநிலங்களின் அறிக்கையின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. இதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமாகி மீண்ட 10 பேரும், பலியான இரண்டு பேரும் அடங்குவர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் அந்த மாநிலத்தில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84ஆக உள்ளது.