கொரோனா வைரஸால் சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து

 

கொரோனா வைரஸால் சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குவைத், ஹாங்காங் செல்லும் 10 விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக்  ஆகிய நிறுவனங்கள்  ரத்து செய்துள்ளன.

ttn

அதேபோல கொரோனா அச்சம் காரணமாக குவைத், ஹாங்காங், இத்தாலிஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து போகும் விமானங்களின் எண்ணிக்கையும் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.