கொரோனா வைரஸால் கடும் நிதி நெருக்கடி…. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் மாநில அரசுகள்….

 

கொரோனா வைரஸால் கடும் நிதி நெருக்கடி…. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் மாநில அரசுகள்….

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள முன்எப்போதும் இல்லாத நிதிநெருக்கடியை சமாளிக்க, பல மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வரி விதிப்புகள் உயர்த்த தொடங்கி உள்ளன. தற்போது நாகலாந்து அரசும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு தழுவிய அளவில் 40 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எந்தவொரு தொழில்நடவடிக்கைகளும் இயங்காததால் மாநிலங்களுக்கு வருவாய் கிட்டத்தட்ட நின்று போனது. இதனால் பல மாநிலங்களின் நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

நாகலாந்து

அரசின் கஜானாவை நிரப்ப தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநில அரசுகள் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளன. அசாம் மற்றும் மேகலாயா மாநில அரசுகள் தங்களது வருவாய் பற்றாக்குறையை சரிசெய்ய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விட்டன. அசாம் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ.5 உயர்த்தியது. மேகலாயா அரசு குறையும் வருவாயை சமாளிக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீது 2 சதவீதம் விற்பனை வரி சர்சார்ஜ் அறிவித்தது. 

பெட்ரோல் பங்கு

தற்போது நாகலாந்து அரசும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. நாகலாந்து அரசு கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டுள்ள முன்எப்போதும் இல்லாத நிதிநெருக்கடியை சமாளிக்கவும், வருவாயை பெருக்கவும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.5ம், பெட்ரோல் மற்றும் மோட்டார் ஸ்பிரிட்டுக்கு ரூ.6ம் செஸ் வரி விதித்துள்ளது. நாகலாந்தில் இன்று முதல் இந்த செஸ் வரி அமலுக்கு வந்துள்ளது.