கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்கியது… கிலியை ஏற்படுத்தும் கோவிட்-19…

 

கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்கியது… கிலியை ஏற்படுத்தும் கோவிட்-19…

நம் நாட்டில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. நேற்று மட்டும் 35 பேர் கோவிட்-19ஆல் பலியாகி உள்ளனர்.

தொற்று நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் நேற்று கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்தது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.

கொரோனா வைரஸ்

நாள்           கொரோனா பாதிப்பு வளர்ச்சி
ஏப்ரல் 18    8.8 சதவீதம்
ஏப்ரல் 19    10.3 சதவீதம்
ஏப்ரல் 20    7.3 சதவீதம்

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள்

மாநிலங்களின் அறிக்கையின்படி, நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,589ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 595ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லி கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மட்டும் முறையே 4,666 பேர் மற்றும் 2,081 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.