கொரோனா வைரஸால் இதுவரை  2118 பேர் பலி…வைரஸ் தாக்குதல் குறைந்துள்ளது என தகவல்!

 

கொரோனா வைரஸால் இதுவரை  2118 பேர் பலி…வைரஸ் தாக்குதல் குறைந்துள்ளது என தகவல்!

ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஆரம்பமான கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

 

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தும், தீவிர ஆய்வு நடத்தியும் வருகிறார்கள். இந்த நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

 


இந்நிலையில்,  சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை  2118 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 74,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் முன்பை போல் இல்லாமல் குறையத் தொடங்கியுள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது.