கொரோனா வைரஸால் இதுவரை 1770 பேர் பலி…செய்வதறியாது திகைக்கும் சீன அரசு!

 

கொரோனா வைரஸால் இதுவரை 1770 பேர் பலி…செய்வதறியாது திகைக்கும் சீன அரசு!

உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தும், தீவிர ஆய்வு நடத்தியும் வருகிறார்கள். 

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்தும், தீவிர ஆய்வு நடத்தியும் வருகிறார்கள். 

 

இந்நிலையில் சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை  1770 ஆக உயர்ந்துள்ளது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

ttn

முன்னதாக  ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.