கொரோனா வைரஸால் அவதியுறும் இத்தாலி – இதுவரை 2158 பேர் உயிரிழப்பு

 

கொரோனா வைரஸால் அவதியுறும் இத்தாலி – இதுவரை 2158 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2158 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2158 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

இந்நிலையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 2158 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதில் 2749 பேர் மட்டுமே குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். இன்னும் 23073 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அத்துடன் அதில் 1851 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இத்தாலியில் தலா 10 லட்சம் பேரில் 350 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.