கொரோனா விஷயத்தை அரசியலாக்கினால் பிணக் குவியல்களை பார்க்க நேரிடும் – ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி

 

கொரோனா விஷயத்தை அரசியலாக்கினால் பிணக் குவியல்களை பார்க்க நேரிடும் – ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி

கொரோனா விஷயத்தை அரசியலாக்கினால் பிணக் குவியல்களை பார்க்க நேரிடும் என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.

ஜெனீவா: கொரோனா விஷயத்தை அரசியலாக்கினால் பிணக் குவியல்களை பார்க்க நேரிடும் என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை குறைக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

Donald Trump

அந்த அமைப்பின் மிகப்பெரிய நிதி ஆதாரமாக அமெரிக்கா இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு நிதியை குறைக்கப் போகிறார் என்பது பற்றி அவர் எந்த விவரமும் கொடுக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மிகவும் சார்புடையதாக நடந்து கொள்கிறது. அது சரியல்ல என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ட்ரம்ப்பின் உரைக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. கொரோனா விஷயத்தை அரசியலாக்கினால் பிணக் குவியல்களை பார்க்க நேரிடும் என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.