கொரோனா விளைவு: 30 ஆயிரம் ஊழியர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

 

கொரோனா விளைவு: 30 ஆயிரம் ஊழியர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 30 ஆயி‌ரம் பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்ய முடிவெடுத்துள்ளது.

லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 3‌0 ஆயி‌ரம் பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்ய முடிவெடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 10 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் அனைத்து நாடுகளின் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

british airways

இந்த நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 3‌0 ஆயி‌ரம் பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம் தொ‌டர்பாக கடந்த ஒரு வாரமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அதன் தொழிலாளர் சங்‌கங்‌களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.