கொரோனா விளைவு – நாட்டில் அக்டோபர் 15 வரை உணவகங்கள், ஹோட்டல்கள் மூடப்படுமா?

 

கொரோனா விளைவு – நாட்டில் அக்டோபர் 15 வரை உணவகங்கள், ஹோட்டல்கள் மூடப்படுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டில் அக்டோபர் 15 வரை உணவகங்கள், ஹோட்டல்கள் மூடப்படுமா என்ற செய்தி குறித்து பிரச்சார் பாரதி உண்மை நிலையை வெளியிட்டுள்ளது.

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டில் அக்டோபர் 15 வரை உணவகங்கள், ஹோட்டல்கள் மூடப்படுமா என்ற செய்தி குறித்து பிரச்சார் பாரதி உண்மை நிலையை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயும், அதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கும் அனைத்து வகையான போலி செய்திகளுக்கும், தவறான தகவல்களுக்கும் ஒரு உந்துகோலாக அமைந்து விட்டது. அந்த வகையில், அக்டோபர் 15 வரை நாட்டில் எல்லா உணவகங்களையும் ஹோட்டல்களையும் மூடுமாறு கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

curfew

ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என கூறியுள்ளது. எந்தவொரு உணவகமும் உணவு விநியோக செயல்பாடுகளை இயக்க அனுமதிக்கப்படுகிறது. ஏனெனில் இவை அத்தியாவசிய சேவைகளின் கீழ் வருகின்றன. தற்போதைய ஊரடங்கின்போது கூட அவை அனுமதிக்கப்பட்டுள்ளன.