கொரோனா வதந்தியை பதிவிட்டால் நீக்குங்கள்! டிக்டாக், ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு அறிவுரை!

கொரோனா வதந்தியை பதிவிட்டால் நீக்குங்கள்! டிக்டாக், ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு அறிவுரை!

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள், பொய்யான தகவல்களுடன் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளை உடனுக்குடன் நீக்குமாறு டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள், பொய்யான தகவல்களுடன் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளை உடனுக்குடன் நீக்குமாறு டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் சார்பில் டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகளின் நிறுவனமான, சீனாவைச் சேர்ந்த பைட்-டான்ஸ் (BYTE DANCE) நிறுவனத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா குறித்து வதந்தி பரப்பும் வகையிலான பதிவுகள் வெளியாகாமல் பார்த்துக் கொள்ளத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

டிக்டாக்

டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகளில் கொரோனா குறித்து மக்களுக்கு தவறான தகவல்களை அளிக்கும் வகையிலான பதிவுகள் இடம்பெறுவதாக டெல்லியைச் சேர்ந்த வாயேஜர் இன்ஃபோசெக் என்ற நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மதரீதியான கருத்துகளும் இடம்பெறாமல் தடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த செயலிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.