கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை : காஞ்சிபுரத்தில் கடைகளை மூட உத்தரவு!

 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை : காஞ்சிபுரத்தில் கடைகளை மூட உத்தரவு!

இதில் தமிழகத்தில் ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களும் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து மற்றும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 

ttn

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதிலும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் தமிழகத்தில் ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களும் இருக்கின்றன. அந்த 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.