கொரோனா மருத்துவ பிரச்னை மட்டுமல்ல, சமூக பொருளாதார பிரச்னையும் கூட! – முதல்வருக்கு ஜோதிமணி எம்.பி பதில்

 

கொரோனா மருத்துவ பிரச்னை மட்டுமல்ல, சமூக பொருளாதார பிரச்னையும் கூட! – முதல்வருக்கு ஜோதிமணி எம்.பி பதில்

கொரோனா என்பது மருத்துவப் பிரச்னை இதற்கு எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று மிகவும் அறிவார்ந்த கேள்வியை எழுப்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூர் எம்.பி ஜோதி மணி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பதில் அது பற்றிய தவறான ஆலோசனைகளையே இதுவரை தமிழக சுகாதாரத் துறை கூறி வருவதாக ஆதாரத்துடன் எதிர்க்கட்சிகள் அடுக்கி வருகின்றன. இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது கொரோனா என்பது மருத்துவ பிரச்னை என்று புதுவித விளக்கம் அளித்தார் எடப்பாடி பழனிசாமி. தான் ஏதோ மிகப்பெரிய மருத்துவர் போலவும், தன்னால் மட்டுமே கொரோனாவை எதிர்கொள்ள முடியும் என்ற வகையிலும் அமைந்திருந்தது அந்த பேட்டி.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு கரூர் எம்.பி-யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜோதிமணி தன்னுடைய ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “தமிழக முதல்வர் அவர்களே கொரொனா தொற்று ஒரு மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல.இது ஒரு சமூகப்,பொருளாதாரப் பிரச்சினையும் கூட.அதனால் தான் கேரளா உள்ளிட்ட மாநிலமுதல்வர்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.இந்த தவறானபுரிதல் தமிழகத்திற்கு நல்லதல்ல. தயவுசெய்து.புரிந்துகொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.