கொரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் படுக்கைகளில் 2 ஆயிரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது…

 

கொரோனா மருத்துவமனைகளில்  நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் படுக்கைகளில் 2 ஆயிரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது…

நாடு முழுவதுமாக கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் படுக்கைகளில் 1.5 சதவீத குறைவான படுக்கைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662ஆக உள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,981ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி விட்டதாகவும், உயிர் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நோயாளியை பரிசோதிக்கும் மருத்துவ பணியாளர்

இந்நிலையில் நாடு முழுவதுமாக கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1.3 லட்சம் படுக்கைகளில் 1.5 சதவீதத்துக்கும் குறைவான படுக்கைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், லாக்டவுன் சமயத்தில் நாங்கள் திறனை அதிகரித்ததால் எங்களது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இல்லை. பெரும்பாலான கேஸ்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) லேசானவை மற்றும் மிகச் சிலர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஐ.சி.யூ. மற்றும் ஆக்ஸிஜனுடன் ஒதுக்கப்பட்ட 1.30 லட்சம் படுக்கைகளில் தற்சமயம்  ஆயிரம் முதல் 2 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த்

நாட்டின் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 64 சதவீத பங்கினை டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கொண்டுள்ளன. அதிலும் டெல்லி, புனே, மும்பை மற்றும் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களும் 50 சதவீத பங்கினை கொண்டுள்ளன என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப காந்த் தெரிவித்தார். டெல்லி முழுவதும் மற்றும் மும்பையின் அனைத்து பகுதிகளும் ஆய்வுக்காக தலா ஒரு மாவட்டமாக கருதப்படுகிறது.