‘கொரோனா பீதி’.. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கக் கோரிய மனு நிராகரிப்பு!

 

‘கொரோனா பீதி’.. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கக் கோரிய மனு நிராகரிப்பு!

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பற்றிய அறிவுறுத்தலைப் பின்பற்றத் தெரியாது என்றும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் பரவும் என்பதால் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ராஜ குரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். 

ttn

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை எந்த மாணவர்களுக்கும் கொரோனா என்பதால் விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விடுமுறை விட வேண்டும் என்ற ராஜ குருவின் கோரிக்கையை நிராகரித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.