கொரோனா பீதி; பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு!

 

கொரோனா பீதி; பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனொரு பகுதியாக, டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

Padma Awards

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 7 பேருக்கு 16 பேருக்கு பத்ம விபூஷன், 118 பேருக்கு  பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு அடுத்து பெரிய சிவில் விருதான பத்ம விபூஷன் விருது கருதப்படுகிறது. பா.ஜ.க.வின் பிரபலங்களான மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொரிசியஷ் முன்னாள் பிரதமரும், இந்திய வம்சாவளி சேர்ந்தருமான அனெரூட் ஜீக்நாத் பெயரும் அடங்கும்.