கொரோனா பீதி: திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம் – தேவஸ்தானம் அறிவுறுத்தல்

 

கொரோனா பீதி: திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம் – தேவஸ்தானம் அறிவுறுத்தல்

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. நேற்றுவரை 39 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 16 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவார்கள். இந்த நிலையில், புதிதாக 4 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கும், கேரளாவில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையில் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

திருப்பதி தேவஸ்தானம்

இந்நிலையில்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருகின்றனர்.  கொரோனா அறிகுறி உள்ள பக்தர்கள் யாரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு வரவேண்டாம் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவதோடு அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக இருக்குமாறும் தேவஸ்தான கூடுதல் செயலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் சளி இருமல் உள்ளவர்கள் இங்கு வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.