கொரோனா பீதி : கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை!

 

கொரோனா பீதி : கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை!

உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ் பாதிப்பை  ‘தொற்றுநோய்’ என்று அறிவித்துள்ளது.

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பின் உயிரிழப்பு உலக அளவில் 8000ஐ எட்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ் பாதிப்பை  ‘தொற்றுநோய்’ என்று அறிவித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ttn

மாநில அரசுகள் கொரோனா தடுப்பு  நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு, மக்கள் கூடும் இடங்களான தியேட்டர், மால், பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், சுகாதாரத்தை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும், அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளன. 

ttn

அதே போல கொடைக்கானலிலும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் காமக்காபட்டி மற்றும் பழனி சோதனைச் சாவடிகளில் சோதனை செய்யப்படுகின்றன. மேலும், கொடைக்கானலுக்கு வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கபட்டு வந்த நிலையில், தற்போது பழனி சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.