கொரோனா பீதி! குளத்துக்குள் கிருமிநாசினி மருந்தை தெளித்ததால் செத்து மிதந்த மீன்கள்…

 

கொரோனா பீதி! குளத்துக்குள் கிருமிநாசினி மருந்தை தெளித்ததால் செத்து மிதந்த மீன்கள்…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்தில் மருந்து தெளித்ததால் மீன்கள் செத்து மிதந்த கொடூர சம்பவம் திண்டுக்கலில் நிகழ்ந்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுத் தரப்பில் மக்கள் கூடும் இடங்களில் மருந்துகளைத் தெளித்துவருகிறார்கள். இதனொரு பகுதியாக சிலுவத்தூர் சாலை மழைநீர் சேகரிப்பு, நடைபயிற்சி மையத்தில் உள்ள குளத்தில் கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கையாக மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மருந்து தெளித்துள்ளனர். இதனால் குளத்திலுள்ள மீன்கள் அனைத்து செத்துவிட்டனர். அதிகாலையில் அந்த வழியாக நடைபெயற்சி சென்றவர்கள் மீன்கள் செத்துக்கிடப்பதை பார்த்து மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். குளம் முழுக்க கிருமிநாசினி மருந்து இருப்பதால் செத்துக்கிடக்கும் மீன்களை முக்குளிப்பான், நாரை போன்றவையும் சாப்பிடமுடியாத சூழல் நிலவுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

fish

தகவலறிந்துவந்த மாநகராட்சி அலுவலர்கள் செத்துக்கிடந்த மீன்களைப் பார்வையிட்டு சோதனைசெய்தனர். இதனால் காலை 9 மணிக்கு மூட வேண்டிய நடைப்பயிற்சி மையம், 8 மணிக்கெல்லாம் மூடப்பட்டது.