கொரோனா பீதி… இறந்தால் இழப்பீடு அறிவித்த பீகார்… பொது இடத்தில் கூட தடைவிதித்த கெஜ்ரிவால்!

கொரோனா பீதி… இறந்தால் இழப்பீடு அறிவித்த பீகார்… பொது இடத்தில் கூட தடைவிதித்த கெஜ்ரிவால்!

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதன் மூலம் கொரோனா பரவுவதைத் தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தியேட்டர், மால்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இடங்களில் டெல்லி முக்கியமானது என்பதால் அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பீதி காரணமாக டெல்லியில் 50 பேருக்கும் அதிகமானோர் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

corona-67

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதன் மூலம் கொரோனா பரவுவதைத் தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தியேட்டர், மால்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இடங்களில் டெல்லி முக்கியமானது என்பதால் அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

coronavirus-delhi-098

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி முடிந்த வரை திருமணங்களைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “50க்கும் அதிகமானோர் கூடும் அனைத்து மத, கலாச்சார, சமூக நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாய மருத்துவ முகாமுக்காக மூன்று தனியார் ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை பணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். கடந்த வாரம் முதலே பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் பலியாகியுள்ளார்” என்றார்.

bihar-cm

இதற்கிடையே கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணத் தொகையிலிருந்து ரூ.4 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முழு செலவையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். ஒருவேளை சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.