கொரோனா பீதியால் கோழிக்கறி விற்பனை சரிவு.. மீன்கள் விலை உயர்வு!

 

கொரோனா பீதியால் கோழிக்கறி விற்பனை சரிவு.. மீன்கள் விலை உயர்வு!

கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலமாகத் தான் பரவுகிறது என்று வதந்தி பரவியது. அதன் பிறகு கோழிக்கறி விற்பனை முற்றிலுமாக சரிந்தது.

கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலமாகத் தான் பரவுகிறது என்று வதந்தி பரவியது. அதன் பிறகு கோழிக்கறி விற்பனை முற்றிலுமாக சரிந்தது. ரூ.200 முதல் 300 வரை விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ கோழிக்கறி, இப்போது ஒரு கிலோவே ரூ.60 முதல் 100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆட்டுக்கறியைப் பொறுத்த வரை எந்த விலை மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.760க்கு விற்கப்பட்டு வருகிறது. 

ttn

கோழிக்கறி விற்பனை பாதிப்படைந்ததால் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளுக்குக் கிராக்கி ஆகிவிட்டது. கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.800 வரையிலும், வவ்வால் மீன் ரூ.600 வரையிலும், பாறை, சீலா, சங்கரா மீன்கள் ரூ.400 வரையிலும் மத்தி மீன் ரூ.80 வரையிலும் நண்டு, இறால் அளவை பொறுத்து ரூ.350 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மீன்களில் ரசாயனம் தடவப் படுவதாக வெளியான தகவலை அடுத்து, மீன் விற்பனையும் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.