கொரோனா பீதியால் குஜராத்தில் அதிகரித்த கோமியம் விற்பனை!

 

கொரோனா பீதியால் குஜராத்தில் அதிகரித்த கோமியம் விற்பனை!

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பசுவின் சிறுநீர் விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனாவுக்கு மருந்துகள் ஏதும் இல்லை என்ற நிலையில் கொரோனா வராமல் தடுக்க பசு மாட்டு சிறுநீர் அருந்தும் வழக்கம் வட இந்தியாவில் சில மக்களிடம் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பசுவின் சிறுநீர் விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரோனாவுக்கு மருந்துகள் ஏதும் இல்லை என்ற நிலையில் கொரோனா வராமல் தடுக்க பசு மாட்டு சிறுநீர் அருந்தும் வழக்கம் வட இந்தியாவில் சில மக்களிடம் உள்ளது. இது குறித்து குஜராத்தின் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபா கட்டாரியா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு பசுவின் சிறுநீரை அருந்தும் பழக்கம் குஜராத்தில் அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 6 ஆயிரம் லிட்டர் பசுவின் சிறுநீரை மக்கள் அருந்துகின்றனர்.

cow-urine-89

கடந்த மாதம் டெல்லியில் ஒரு குழுவினர் பசுவின் சிறுநீரை அருந்திய செய்தி வெளியானது. அதன் பிறகு குஜராத்தில் பசுவின் சிறுநீர் அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பசுவின் சிறுநீரை அருந்துவது மட்டுமல்ல, உடலில் தெளிக்கவும் வாங்கிச் செல்கின்றனர். அது நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டது என்று நம்பப்படுகிறது. பசுவின் கோமியம் பாக்டீரியாவை அழிக்கிறது, நிச்சயம் கொரோனா வைரஸையும் அழிக்கும்” என்றார்.