கொரோனா பாதிப்பை சரி செய்ய ரூ. ஒரு கோடி உதவி செய்ய தயாரா? – ரஜினிக்கு சவால் விட்ட தொழிலதிபர்

 

கொரோனா பாதிப்பை சரி செய்ய ரூ. ஒரு கோடி உதவி செய்ய தயாரா? – ரஜினிக்கு சவால் விட்ட தொழிலதிபர்

கொரோனா கிருமி 14 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்று ரஜினி கூறியதை ட்விட்டரே நீக்கிவிட்டது.  இதைத் தொடர்ந்து பொய்யான செய்தி ரஜினி என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. ரஜினியை விமர்சித்து பதிவிட்ட பலரையும் ரஜினி ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர். மழைக் காலங்களில் மழை பெய்யுமா என்று வானிலை ஆய்வு மையம் கூறுவதை விட வெதர்மேன் பிரதீப் கூறுவதையே பலரும் நம்புகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் தன்னை தொடர்ந்து விமர்சித்து பதிவிட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நான் ஒரு கோடி ரூபாய் உதவி செய்கிறேன், ரஜினி செய்வாரா என்று தொழிலதிபர் வருண் மணியன் சவால்விடுவதுள்ளார்.

rajinikanth-45.jpg

கொரோனா கிருமி 14 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்று ரஜினி கூறியதை ட்விட்டரே நீக்கிவிட்டது.  இதைத் தொடர்ந்து பொய்யான செய்தி ரஜினி என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. ரஜினியை விமர்சித்து பதிவிட்ட பலரையும் ரஜினி ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர். மழைக் காலங்களில் மழை பெய்யுமா என்று வானிலை ஆய்வு மையம் கூறுவதை விட வெதர்மேன் பிரதீப் கூறுவதையே பலரும் நம்புகின்றனர். 14 மணி நேரத்தில் கொரோனா கிருமி அழியும் என்பது தவறான தகவல் என்று கூறிய வெதர்மேன் பிரதீப்பை ரஜினி ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர். இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபர் வருண் மணியனையும் ரஜினி ரசிகர்கள் மிகக் கடுமையாக தாக்கி பதிவிட்டு வருகின்றனர். 

tn-weather-man

தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் வம்பிழுக்கவே வருண் மணியன் எரிச்சல் அடைந்து ரஜினிக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “இந்த பெருந் தொற்று சமயத்தில் மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் கிருமி பாதிக்கப்பட்டவரை விரைவாக கண்டறியும் கருவியை ரூ.1 கோடிக்கு சீனாவில் இருந்து வாங்கி வருகிறேன். மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் ரஜினிகாந்த் ரூ.1 கோடி தரத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினிகாந்த், தமிழக முதல்வர், பத்திரிகையாளர்கள் என பலரையும் அந்த பதிவில் டேக் செய்துள்ளார் வருண் மணியன். ஆனால் இதற்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கவில்லை. சவாலை ஏற்பாரா அல்லது மறுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ட்விட்டர் வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.