கொரோனா பாதிப்பு: பொய் தகவலை பரப்பிய பாலிமர் தொலைக்காட்சி 

 

கொரோனா பாதிப்பு: பொய் தகவலை பரப்பிய பாலிமர் தொலைக்காட்சி 

பாலிமர் தொலைக்காட்சியில் விருதுநகர் மாவட்ட காவலருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியிடப்பட்டது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் உயிரிழப்பு 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 467 பேர் பாதிக்க பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் வதந்திகள் தொடர்கிறது. 

corona virus

இந்நிலையில் பாலிமர் தொலைக்காட்சியில் விருதுநகர் மாவட்ட காவலருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது தெரியவந்துள்ளது. மேற்படி காவலருக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே என மருத்துவ அதிகாரிகள் சான்று அளித்துள்ளனர். எனவே இது தொடர்பான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து உண்மை விளக்கப்பட்டதுடன் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.