கொரோனா பாதிப்பு எதிரொலி; சீனாவில் அவசரநிலை பிரகடனம்

 

கொரோனா பாதிப்பு எதிரொலி; சீனாவில் அவசரநிலை பிரகடனம்

கொரோனா பாதிப்பு எதிரொலியால் சீனாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு எதிரொலியால் சீனாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலை என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

Coronavirus

ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் சிறிதளவு குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்திருந்தாலும் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 77 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாக சீன அதிபர் ஜிஜின்பிங் தெரிவித்துள்ளார்.