கொரோனா பாதிப்பு உள்ளவர்களால் சமூக தொற்று ஏற்படலாம்! – பீதியை கிளப்பிய விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு உள்ளவர்களால் சமூக தொற்று ஏற்படலாம்! – பீதியை கிளப்பிய விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்பப்பட்ட பலர் காணாமல் போய் உள்ளதாகவும் இதனால் கொரோனா பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“கண்காணிப்பு இருந்தாலும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்ட சில பயணிகள் அதை மீறி செயல்பட்டதன் காரணமாக சமூக தொற்று நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பயணிகளின் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாராவது அரசின் உத்தரவை மீறி நடந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கொரோனா தவிர்க்க தீவிர நடவடிக்கை அவசியம். விமான நிலையங்களிலேயே தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு தனிமைபடுத்தியிருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. சுய தனிமைப்படுத்தல் மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பியவர்கள் ரயில், பஸ்களில் சர்வ சாதாரணமாக பயணம் மேற்கொள்ளும் செய்தி வந்துகொண்டே இருக்கும் நிலையில், இனி அதையும் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.