கொரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி செயல்பட்ட 8 கடைகளுக்கு சீல்!

கொரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி செயல்பட்ட 8 கடைகளுக்கு சீல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட துணிக்கடைகள், பேக்கரிகள், சலூன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட துணிக்கடைகள், பேக்கரிகள், சலூன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமா கிருஷ்ணகிரி உள்ளது. ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று ஒருவருக்கு கூட இல்லை என்றபோதிலும் மாவட்டம் முழுவதும் தீவிர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

krishnagiri

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியில் மளிகைக் கடைகளுடன் சலூன்கள், பேக்கரிகள், துணிக்கடைகள் திறக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் இரண்டு சலூன்கள், இரண்டு துணிக் கடைகள், மூன்று பேக்கரி மற்றும் குறிப்பிட்ட நேரத்துக்கும் மேலாக கடையைத் திறந்து வைத்திருந்த மளிகைக் கடை ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். மேலும், இந்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.