கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கு…. அதனால கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது… உண்மையை வெளிப்படையாக சொன்ன உத்தவ் தாக்கரே

 

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கு…. அதனால கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது… உண்மையை வெளிப்படையாக சொன்ன உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கட்டுபாடுகளை தளர்த்துவது சாத்தியமில்லாதது. இருப்பினும் பச்சை மண்டலங்களில் மேலும் பொருளாதார நடவடிக்கைகளை காணலாம். பச்சை மண்டலங்களாக தொடர்ந்து வைத்திருப்பதே சவாலாக உள்ளது. ஆனாலும் எனது அரசு 50 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போய் விட்டதால் தொழில்துறையில் மனிதவளம் குறைவாக உள்ளது.

லாக்டவுன்

ஆகையால் மகாராஷ்டிரா சகோதர மற்றும் சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன், நீங்கள் பச்சை மண்டலத்தில் இருந்தால் தயவு செய்து வெளியே வாருங்கள். புலம்பெயர்ந்தவர்களால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புங்க. மோடிஜியின் மொழியில் மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுக்கிறேன் நாம் சுய சார்பாக ஆகலாம்.

ஊரடங்கால் வெறிச்சோடி கிடக்கும் மும்பை சாலை

நாம் லாக்டவுனை தளர்த்தினால் என்ன மற்றும் கொரோனா வைரஸ் எல்லா இடத்திலும் பரவவா? மகாராஷ்டிராவில் அப்படி நிகழ்வதை அனுமதிக்க மாட்டேன். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்குதான் லாக்டவுன். இருப்பினும் நாம் கொரோனா வைரஸ் சங்கிலியை உடைக்கவில்லை. நாம் முயற்சி செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நம் நாட்டில் மகாராஷ்டிராவில்தான்  அதிகபட்சமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.