கொரோனா பாதிப்புடன் சீனாவிலிருந்து கேரளா சென்ற திருச்சூர் மாணவி குணமானார் !

 

கொரோனா பாதிப்புடன் சீனாவிலிருந்து கேரளா சென்ற திருச்சூர் மாணவி குணமானார் !

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்குக் கூட இந்த நோய் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. 

ttn

கொரோனா பாதிப்பு தீவிரமடையத் தொடங்கிய போது சீனாவில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் அங்கிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அதில் கேரள மாநிலத்துக்கு வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த 3 மாணவிகளில் கொரோனா பாதிப்புடன் முதன்முதலில் கேரளா வந்தது திருச்சூர் மாணவி தான். அந்த மாணவி திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மற்ற இரண்டு மாணவிகளும் ஆலப்புழா, காசர்கோடு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ttn

முதலில் ஆலப்புழாவில் இருந்த மாணவி குணமானதை அடுத்து, காசர்கோடு அரசு மருத்துவமனையில் இருந்த மாணவிக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர்கள் இரண்டு பேரும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சூர் மாணவியின் ரத்த பரிசோதனை வருவதற்குத் தாமதம் ஆனதால் அந்த மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று வந்த மருத்துவ அறிக்கையில் அவர் கொரோனாவில் இருந்து பூரணமாகக்  குணமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாணவியையும் வீட்டிற்கு அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.