கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்…..124 கொரோனா கேஸ்களுடன் தமிழகம் 3வது இடம்…
நம் நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம். நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிர்பலியில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள டாப் 10 மாநிலங்கள் பட்டியல் இதோ…
மாநிலம் கொரோனா பாதித்தவர்கள் இறப்பு
மகாராஷ்டிரா 302 12
கேரளா 241 2
தமிழ்நாடு 124 1
டெல்லி 120 2
உத்தர பிரதேசம் 103
கர்நாடகா 101 3
ராஜஸ்தான் 93 2
தெலங்கானா 92 6
குஜராத் 74 6
இதர மாநிலங்கள் 368 18
————– —————-
மொத்தம் 1,618 52