கொரோனா பாதிப்பால் 44 பில்லியன் டாலர் விளம்பர வருமானத்தை இழக்கும் கூகுள் மற்றும் பேஸ்புக்

 

கொரோனா பாதிப்பால் 44 பில்லியன் டாலர் விளம்பர வருமானத்தை இழக்கும் கூகுள் மற்றும் பேஸ்புக்

கொரோனா பாதிப்பு காரணமாக கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்தாண்டு சுமார் 44 பில்லியன் டாலர் விளம்பர வருமானத்தை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா: கொரோனா பாதிப்பு காரணமாக கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்தாண்டு சுமார் 44 பில்லியன் டாலர் விளம்பர வருமானத்தை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 22,025-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில் இதுவரை உலகில் 1 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இத்தாலியிலும், ஈரானிலும் கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

ttn

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்தாண்டு சுமார் 44 பில்லியன் டாலர் விளம்பர வருமானத்தை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோவன் அண்ட் கோவின் கூற்றுப்படி, கூகிளின் மொத்த நிகர வருவாய் சுமார் 127.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 28.6 பில்லியன் டாலர் சரிவாகும். 2020-ஆம் ஆண்டிற்கான பேஸ்புக்கின் விளம்பர வருவாய் 67.8 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 15.7 பில்லியன் டாலர் குறைவு என்று கோவனின் தரவை மேற்கோள் காட்டி வெரைட்டி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.