கொரோனா பாதித்த கணவனை விட்டு பெங்களூருவில் இருந்து ஆக்ரா சென்ற பெண் – பொதுமக்கள் அச்சம்

 

கொரோனா பாதித்த கணவனை விட்டு பெங்களூருவில் இருந்து ஆக்ரா சென்ற பெண் – பொதுமக்கள் அச்சம்

கொரோனா வைரஸ் பாதித்த கணவனை விட்டு ஆக்ராவில் உள்ள வீட்டுக்கு பொதுப் போக்குவரத்து மூலம் சென்ற பெண் பிடிபட்டார்.

பெங்களூரு: கொரோனா வைரஸ் பாதித்த கணவனை விட்டு ஆக்ராவில் உள்ள வீட்டுக்கு பொதுப் போக்குவரத்து மூலம் சென்ற பெண் பிடிபட்டார்.

பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் தான் அவருக்கும் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் கடந்த மாதம் இத்தாலி நாட்டுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்தியா வந்த பிறகு கணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ttn

கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவரது மனைவியான அந்தப் பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கருதினர். ஆனால் அந்த பெண்ணை பரிசோதிப்பதற்குள் அவர் யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் ஆக்ராவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை காவலர்கள் உதவியுடன் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ttn

அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு சாத்தியமுள்ள பெண் விமானம் மற்றும் ரெயில் என பொதுப்போக்குவரத்து மூலம் பயணித்திருப்பது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.